Ammathottam Village
Ammathottam Village
அஸ்ஸலாமுஅலைக்கும்
Welcome to our page
இலங்கையில் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி பிரதேசத்தில் உள்ள சின்னஞ் சிறிய ஒரு கிராமம்அம்மாதோட்டம். இங்கு எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.எமது கிராமத்துக்கு வடக்கு திசையில் பள்ளிவசல்துறை கிராமமும், மேற்கு திசையில் இலங்கையில் புத்தளம் மாவட்டத்தில் பிரபல்யமான நாச்சிக்களி உப்பளமும், தெற்கு திசையில் கரக்காதீவு என்னும் கிராமமும், கிழக்கு திசையில் புத்தளம் களப்பும் அமைந்துள்ளது. இங்கு மிக வறுமையான மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் பிரதான தொழில் மீன் பிடி, விவசாயம், கூலி வேலை என்பனவாகும். இங்கு ஒரு சிலரே அரச தொழில் செய்கின்றனர். மேலும் ஒரு சிலர் தொழில் வாய்ப்பை தேடி வெளிநாட்டுக்கும் செல்கின்றனர்.எமது பிரதேசத்தில் பிரபல்யமான அரச ஆயுர்வேத வைத்தியசாலையும் அமைந்து உள்ளது. எமது பள்ளிக்கு கட்டுப்பட்ட சுமார் 160 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றனர்.
எமது அம்மதோட்டம் கிராமம் பற்றிய எமது இணையத்தளத்தில் பார்வையிட வந்தவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
இங்கு இருக்கும் தமிழ் மொழி விளக்கத்தினை நீங்கள் ஆங்கில மொழியிலும் மொழி மாற்றி பார்வையிட முடியும்.
இந்த பக்கத்தை வடிவமைத்தவர்
டீ . எம். இஹ்ஷான்
தொலைபேசி இலக்கம் - (94) 0713232196